Skip to content
Home » திருச்சி அருகே நள்ளிரவில் திருநங்கை கழுத்து அறுத்து படுகொலை….

திருச்சி அருகே நள்ளிரவில் திருநங்கை கழுத்து அறுத்து படுகொலை….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட திருநங்கை வசித்து வருகின்றனர். பலர் கௌரவமாக தொழில் செய்து வாழ்ந்த வருகின்றனர். பெரும்பான்மையான திருநங்கைகள் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல குழுக்களாகப் பிரிந்து இரவு நேரங்களில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு சில திருநங்கைகள் சிக்னல்களில் யாசகம் எடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணையில் இருந்து சமயபுரம் சுங்கச்சாவடி வரை 60க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பாலியல் தொழிலில் குழுக்களாக பிரிந்து ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் வசிக்கும் திருநங்கை ஆர்த்தி இவருக்கு கீழ் 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். இவர்கள் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நம்பர் 1 டோல்கேட் அருகே கொள்ளிடம் ஆற்றிலிருந்து அய்யன் வாய்க்கால் இடைப்பட்ட பகுதியில் 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மணிகண்டன் என்கிற மணிமேகலை கடந்த 6 வருடத்திற்கு முன்பு ஆர்த்தியை அம்மாவாக ஏற்றுக்கொண்டு நம்பர் 1 டோல்கேட் பகுதியில் இரவு நேரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். ரூர் மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற மணிமேகலை இன்று வழக்கம் போல் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காக நம்பர் 1 டோல்கேட் அருகே அய்யன் வாய்க்கால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்றுள்ளார். அப்போது இளைஞர் ஒருவர் மணிமேகலையை உடலுறவு அழைத்து மறைவான பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியால் திருநங்கை மணிமேகலை கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதி குத்திவிட்டு தப்பி சென்றார். இதில் திருநங்கை மணிமேகலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த சக திருநங்கைகள் 20க்கும் மேற்பட்டோர் அங்கு கூடி அழுதனர்.

தகவல் அறிந்த சமயபுரம் காவல் ஆய்வாளர் விதுன்குமார், லால்குடி சராக காவல் துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் இறந்த திருநங்கை உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வந்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் திருநங்கை அணிந்திருந்த கவரிங் செயின் மற்றும் 70க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்படாத ஆணுறைகளையும் கைப்பற்றி விசாரணை செய்ததார். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. மேலும் கைரேகை நிப்புணர்வுகளை கொண்டு கத்தியில் உள்ள கைரேகை தடையங்களை சேகரித்தனர. இந்த சம்பவத்தினால் இந்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு இப்ராஹிம் பூங்கா எதிரே உள்ள லாட்ஜில் சுதா என்ற திருநங்கை கழுத்து அறுத்தும், உடம்பில் 29 இடத்தில் குத்தி கொலை செய்த சம்பவம் தமிழகத்தை பெரும் பரபரப்பில் ஏற்படுத்தியது. இந்தநிலையில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அய்யன் வாய்க்காலில் இருந்து கொள்ளிடம் ஆறு வரை திருநங்கைகள் பாலியல் தொழில் ஈடுபட்டு வருபவர்களை கொள்ளிடம் காவல் நிலைய போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதால் வழிபறி திருட்டுக்கள் நடைபெற்று வருகிறது. அரை கிலோமீட்டர் தொலைவில் கொள்ளிடம் புறக்காவல் நிலையத்தில் 15 க்கும் மேற்பட்ட காவலர்கள் இருந்தும் ரோந்து பணிக்கு செல்லாமல் கண்டுகொள்ளாமல் இருந்ததால் இன்று கொலை நடந்துள்ளது. இதற்கு கொள்ளிடம் போலீசார் தான் முழு காரணம் என கூறப்படுகிறது. யார் கொலையாளி எதற்காக கொலை செய்தார் என குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். பல திருநங்கைகள் சக மனிதர்களைப் போல் உழைத்து பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் பாலியல் தொழில் ஈடுபடுகின்ற இதுபோன்ற திருநங்கைகளால் சக திருநங்கைகளுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *