திருச்சி தெப்பக்குளம் அருகே மிகவும் பிரபலமான மைக்கில்ஸ் ஐஸ்கிரீம் கடை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் ஐஸ்கிரீம் சாப்பிடுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று வாடிக்கையாளர் ஒருவர் இந்த கடையில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது ஐஸ்கிரீமில் இறந்த பல்லியின் உடலின் பாகங்கள் கிடந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த
வாடிக்கையாளர் இதுகுறித்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபுக்கு புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் ரமேஷ்பாபு தலமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது பல்லி விழுந்ததாக எழுந்த புகார் உண்மை என கண்டறியப்பட்டது. மேலும் கடை சுகாதாரமற்ற முறையிலும், கிருமி தொற்று ஏற்படும் வகையிலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டு , ஐஸ்கிரீம் மாதிரிகள் கைப்பற்றப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.