தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் புதிய உழவர் சந்தையை தொடங்கி வைத்தார்கள். இதனையொட்டி திருச்சிராப்பள்ளி மண்ணச்சநல்லூர் புதிய உழவர் சந்தையில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட கலெக்டர்.பிரதீப் குமார் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில், இணை இயக்குனர் (வேளாண்மை) முருகேசன், துணை இயக்குநர் வேளாண் வணிகம் கு.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை)
மல்லிகா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் விமலா, மண்ணச்சநல்லூர் ஒன்றியக்குழுத்தலைவர் ரெ.ஸ்ரீதர், விவசாய பெருமக்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.