விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் கட்சியின் எழுச்சி தமிழர் திருமாவளவன் புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார். அதன்படி புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் தங்களது மாவட்டங்களில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சியில் புதிதாக பொறுப்பு திருச்சி, கரூர் மண்டல செயலாளர் தமிழாதன் மற்றும் கிழக்கு மாநகர செயலாளர் கனியமுதன் ஆகியோர் திருச்சி கிழக்கு மாநகர அலுவலகத்திலிருந்து
100க்கு மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் தங்கதுரை, அரசு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் பிரபாகரன், சந்தன மொழி, ஆல்பட்ராஜ், அரியமங்கலம்
ஃபெரோஸ்கான், ஞானம், பெரியசாமி, முருகேசன்,
வேல் சந்திரசேகரன், தினேஷ், சரவணன்,
உட்பட கலந்து கொண்டனர்.