திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் பிரசித் திபெற்ற நீலிவனநாதர் கோவில் உள்ளது. கல்வாழை பரிகார தலமாகவும், எமனுக்கு என்று தனி சன்னதி உள்ள தலமாகவும் விளங்கி வரும் இக்கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் ஆடிப்பூர தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தேரோட்ட நிகழ்ச்சி நேற்று முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி, வசந்த மண்டப விநாயகருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து அலங்காரமும் நடைபெற்றது.தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு12.30 மணிக்கு மேளதாளங்கள் முழங்க முகூர்த்த கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் மனோகரன் மற்றும் கிராம பட்டயதாரர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.