திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சை மலையில் உள்ள மங்களம் அருவியில் ஊட்டிய சேர்ந்த நிஷாந்த் ( 26) குன்னூர் தமீம் (23) கேத்திபகுதியை சேர்ந்த ஜெபஸ்டின்(23) ஆகியோர் நண்பர்கள் இவர் ஊட்டியில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு முகநூல் வழியாக தாப்பேட்டை சேர்ந்த பெண் ஒருவர் பழக்கம் ஆகியுள்ளார். அவரை காண்பதற்காக முசிறி அருகே உள்ள தாப்பேட்டைக்கு மூவரும் ஊட்டியில் இருந்து வந்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் பெண் உள்பட நால்வரும் இரு சக்கர வாகனத்தில் துறையூர் அருகே பச்சை மலையில் உள்ள மங்களம் அருவிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஜெபஸ்டின் நிஷாந்த் தமீம் ஆகியோர் மூவரும் குளிப்பதற்காக மேலிருந்து நீரில் ஒருவர் பின் ஒருவராக குதித்துள்ளனர். நீரின் அடியில் பாறை இருப்பது தெரியாமல் விழுந்ததால் நீண்ட நேரம் ஆகியும் தமீமை காணவில்லை என அவரை தேடுவதற்காக ஜெபஸ்டின் குதித்துள்ளார். ஜெபஸ்டினும் நீண்ட நேரம் ஆகியும் மேலே வராததால் அவரைக் காண நிஷாந்த் குதித்துள்ளார் மூவரும் பாறையில் அடிபட்டு இருந்த நிலையில் அவருடன் வந்த தாப்பேட்டையை சேர்ந்த பெண் மூவரையும் காணவில்லை என அச்சத்தில் கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் வயல்களில் வேலை செய்தவர்ள் ஒடி வந்து அவர்கள் நீரில் தேடிய பொழுது நிஷாந்த் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி தம்மம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் தமீம் மற்றும் ஜெபஸ்டின் ஆகிய இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர் நீண்ட நேர தேடலுக்குப் பிறகு தமீம் மற்றும் ஜெபஸ்டீன் இருவரையும் சடலமாக மீட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடல்களை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.