Skip to content
Home » திருச்சி அருகே திருமணமான 40 நாட்களில் வாலிபர் தற்கொலை …

திருச்சி அருகே திருமணமான 40 நாட்களில் வாலிபர் தற்கொலை …

திருச்சி அரியமங்கலம் அம்மா குளம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஹக்கீம் இவரது மகன் ஆதம் தீன் வயது (27) எம்.காம் பட்டதாரியான இவர் அக்கவுண்டண்டாக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார்.

இந்த நிலையில் இவருக்கு வடக்கு உக்கடை அரியமங்கலம்

பகுதியை சேர்ந்த மதினா பேகம் என்பவருடன் கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் ஆதம் தீன்னிடம் மதினா பேகம் குடும்பத்தினர் தனி குடித்தனம் போகுமாறு கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஆதம் தீன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக அறையில் படுத்து இருந்துள்ளார். நேற்று காலை 9 மணிக்கு அறையின் கதவை திறக்காத நிலையில் குடும்பத்தினர் ஜன்னல் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ஆதம் தீன் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

 

இச்சம்பவம் குறித்து மதினா பேகம் அரியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆதம் தீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *