திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த புள்ளம்பாடி அருகே கல்லகம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் 19 வயதான வெற்றிவேல்.இவர் கால் வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி வீட்டில் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வெற்றிவேலை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் வெற்றிவேலின் தந்தை வெங்கடாசலம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை கல்லகத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.