தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 36 வயதான சிவகுமார். இவர் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் உள்ள பட்டம்மாள் தெருவை சேர்ந்த கௌரி என்பவரை கடந்த 11 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஊருக்கு செல்லாமல் தனது மாமியார் வீட்டோடு இங்கே தங்கியுள்ளார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் 7 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த 2 வருடத்திற்க்கு முன்பு தாளக்குடியில் உள்ள குருக்கள்தோப்பு, பஜனை மாதா தெருவில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மேலும் சிவகுமார் கடந்த இரண்டு மாதமாக வேலைக்கு ஏதும் செல்லாமல் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் மது குடிக்க தனது மனைவிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. மனைவி பணம் தர மறுத்ததால் மிகுந்த மன உளைச்சலில் சிவகுமார் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் அவரது மனைவி கௌரி அளித்த புகாரின் பேரில் ககொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.