திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட பச்சப் பெருமாள் பட்டி ஊராட்சியில் நான்காவது வார்டில் உறுப்பினராக இருப்பவர் பாஸ்கர் சம்பவத்தன்று இவர் வாரடில் தெரு விளக்கு எரியவில்லை என கூறி ராஜதுரை கேட்டுள்ளார். இது தொடர்ந்து எலக்ட்ரீசியன் சக்திவேலை அழைத்து தெரு விளக்கை எரிய விடுவதற்காக சென்றபோது மது போதையில் இருந்த ராஜதுரை வார்டு உறுப்பினர் பாஸ்கரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு முற்றியது தொடர்ந்து ராஜதுரை மறைத்து வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து உடைத்து அதை வார்டு உறுப்பினர் பாஸ்கர் காது பக்கத்தில் குத்தியுள்ளார் இதனால் ரத்தம் பீரிட்டு அடித்ததை தொடர்ந்து உடனடியாக 108 வாகனம் மூலம் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து வார்டு உறுப்பினர் அளித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் காவல் துறையினர் ராஜதுரை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வார்டு உறுப்பினர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:திருச்சி