திருச்சி மாவட்டம்,லால்குடி அருகே புள்ளம்பாடி அருகே வந்தலைக்கூடலூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கணேசன்(52). இவருடைய மனைவியை பூமணி (48) . இவர்கள் இருவரும் டூவீலரில் வந்தலைக் கூடலூரிலிருந்து புள்ளம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதேபோல் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 24 வயதான சிவபிரபு எதிரே காரில் வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் புள்ளம்பாடியில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலை தடுமாறி கணவன் மனைவி இருவரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இத்திற்க்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த கணேசன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த மனைவி பூமணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.