திருச்சி லால்குடி அருகே உள்ள தின்ன குளம் சவேரியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன் ( 46). இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் வீரகனூர் கருப்பு கோவில் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது உறவினர்கள் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புள்ளம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் மீண்டும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி ஜார்ஜ் வாஷிங்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி தனலட்சுமி கள்ளக்குடி போலீசில் புகார் செய்தார். விசாரணையில் இறந்த ஜார்ஜ் வாஷிங்டன் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.