திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆதிகுடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் 40 வயதான முருகேசன். கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி கணவர் முருகேசனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த முருகேசன் கடந்த 14 ம் தேதி இரவு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைக் கண்டு அவர்கள் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு்ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.