திருச்சி மாவட்டம் மண ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் மன்ற தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோனி லூயிஸ் மத்தியாஸ் தலைமையில் நடைபெற்றது.
சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தோனி லூயிஸ் மத்யாஸ் திறந்து வைத்தார். இதில் மாணவர்கள் 50 க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இந்த கண்காட்சியை பள்ளி ஆசிரியர்களும் மாணவ, மாணவிகளும் கண்டு களித்தனர். பிற்பகல் நிகழ்வாக அறிவியல் மன்ற
தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த திருச்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது..
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் துறை சார்ந்த ஆசிரியகள் ஏற்பாடு செய்திருந்தனர்.இந்நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.