Skip to content
Home » திருச்சி அருகே பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி அருகே பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த பெருமாள் பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் பாபு இவரது மகன் பாலாஜி (15). பள்ளி மாணவனின் படிப்பிற்காக துறையூர் முட்டைக்கரை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். பாலாஜி துறையூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லாத மாணவனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மணமடைந்த பள்ளி மாணவன் பாலாஜி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தன் தாயின் சேலையை போட்டு கழுத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் . கதவை உடைத்து உள்ளே சென்று பெற்றோர் மாணவனை தூக்கிக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாலாஜி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *