திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் சாலையில் தனியாக வீடு எடுத்து திருவெறும்பூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த காளியப்பன் மனைவி பரமேஸ்வரி வயது (44) மணப்பாறை காவல்காரம்பட்டி பெரியசாமி மனைவி ரேணுகா (36)ஆகிய இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி விபச்சார தொழில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை திருச்சி கொண்டையம்பேட்டை மல்லிகை புரத்தைச் சேர்ந்த முனிர் (எ) சையது முகமது இமாம் (42)என்பவர் அந்த வழியாக வந்து பொழுது அவர்கள் விபச்சாரத்துக்கு அழைத்துள்ளனர். இது சம்பந்தமாக முனீர் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெறும்பூர் போலீசார் விபச்சாரத்தில் ஈடுபட்ட பரமேஸ்வரி மற்றும் ரேணுகா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.