திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவாளூர் துணை மின் நிலையத்தில் உயர் மின்பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை மின்தடை.
இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லால்குடி இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் அன்புசெல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது லால்குடி வட்டம் பூவாளூர் துணை மின் நிலையத்தில் உயர் மின்பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஆதிகுடி, கொன்னைகுடி, அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருதிக்கால், காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி மற்றும் மேட்டுப்பட்டி பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. என செயற் பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.