Skip to content
Home » திருச்சி அருகே புதிய போலீஸ் ஸ்டேசன்… காணொலி வாயிலாக டிஜிபி திறப்பு…

திருச்சி அருகே புதிய போலீஸ் ஸ்டேசன்… காணொலி வாயிலாக டிஜிபி திறப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள காணக்கிளியநல்லூரில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தும் வகையில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்தை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

லால்குடி சட்டமன்ற தொகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க லால்குடி, மற்றும் கல்லக்குடி காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் லால்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றியத்திலிருந்து 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சட்ட ஒழுங்கிற்காக புகார் மற்றும் வழக்கு பதிவு செய்ய மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள சிறுகனூர் காவல் நிலைய சரகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.. தற்போது சுற்று

வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஏற்படும் சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்தும் வகையில் காணக்கிளியநல்லூர் ஊராட்சியில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்தக் காவல் நிலைய சரகத்திற்க்குட்பட்ட தாய் கிராமங்களான தாப்பாய், வரகுப்பை, கூடலூர், பூஞ்சை சங்கேந்தி குமுளூர், கண்ணாக்குடி, பெருவளப்பூர்,தெரணி பாளையம், நம்புக்குறிச்சி, சிறுகளப்பூர், அழுந் தலைப்பூர், கருடமங்கலம், சரடமங்கலம், ஊட்டத்தூர், தச்சங் குறிச்சி, புதூர் உத்தமனூர், கணக்கிளியநல்லூர் மற்றும் குக் கிராமங்களான டி. மேட்டூர், சிறுவயலூர், வந்தலை, விடுதலைப்புரம், வளர்நாதபுரம், கொளக்குடி, உக்கலூர் நல்லூர் உள்ளிட்ட கிராமங்கள் இந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த காவல் நிலையத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக டிஜிபி காணொளி காட்சி மூலம் இன்று காலை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து காணக்கிளிய நல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்நிலையத்தின் கல்வெட்டுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பின்னர் அமைச்சர் கே.என். நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன்,திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் சரவணன் சுந்தர், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சுஜித் குமார்,ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

இந்நிகழ்வில் லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம்,,லால்குடி எம்எல்ஏ செளந்தரபாண்டியன் , புள்ளம்பாடி சேர்மன் ரசியா கோல்டன் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் காணக்கிளியநல்லூர் சிங்கராயர் , ஊட்டத்தூர் இந்திரா அறிவழகன்,பி.கே. அகரம் மங்கையர் கரசி சோமசுந்தரம்,ரெட்டி மாங்குடி தங்கவேல் மற்றும் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் காவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *