திருச்சி திருவெறும்பூர் அருகே வேங்கூர் சாலையில் சௌடாம்பிகா குரூப்பில் அங்கம் வகிக்கும் செல்லம்மாள் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். சௌடாம்பிகா குழுமத்தின் தலைவராக ராமமூர்த்தி இருந்து வருகிறார். இந்தப் பள்ளியின் முதல்வராக பகவதி அப்பன் செயல்பட்டு வருகிறார். இந்த பள்ளியில் ஆண்டு தோறும் பாத
பூஜை விழா நடத்தப்படுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டு நடந்த விழாவில் பெற்றோர்களை தெய்வத்துக்கு நிகராக மதிக்கும் வகையில் மாணவ, மாணவிகள் அவர்களை மதித்து போற்றும் வகையில் பெற்றோர்களின் பாதங்களை கழுவி அவர்களுடைய கால்களில் சந்தனம் குங்குமம் இட்டு பூஜை செய்து அவர்களுக்கு கழுத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பதிலுக்கு பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளை ஆசீர்வாதம் செய்தனர். இந்த நிகழ்வு அங்கு பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய செய்ததோடு சிலரின் கண்களில் கண்ணீர் வரவழைத்தது. இந்த நிகழ்வில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.