திருச்சி சிந்தாமணி அந்தோனியார் கோயில் தெருவை சேர்ந்தவர் அங்கமுத்து.இவரது மகன் ரமேஷ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டி கடையில் பானி பூரி கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்நிலையில் பானிபூரி கடைக்கு மேலே ப்ளாஸ்டிக் சீட் அமைக்க முடிவு செய்து அதை எடுத்து வருவதற்க்காக மோட்டார் பைக்கில் பளூர் வந்துள்ளார்.பின்னர் பிளாஸ்டிக் சீட்டை எடுத்துக் கொண்டு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வலது பக்கம் திருப்புவதற்க்காக மோட்டார் பைக்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் வாகனம் மோட்டார் பைக் மீது மோதிவிட்டு தப்பி சென்றது. இதில் தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த ரமேஷை அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டார் என கூறினார்.
இது குறித்த தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.