Skip to content
Home » திருச்சி அருகே பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி அருகே பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை சவாரியார் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் விஜயகுமார்( 38 ) பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார். இவர் காசிலா(35)என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . மேலும் இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் குடிபழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் மது போதையில் தனது மனைவி காசிலாயிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை மது போதையில் இருந்த விஜயகுமார் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தனது அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இதை கண்ட அக்கம் பக்கத்தினர் விஜயகுமாரை உடனடியாக மீட்டு துவாக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இச்சம்பவம் குறித்து காசிலா துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் துவாக்குடி போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *