திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சி 7வது வார்டிற்கு உட்பட்ட கணபதி நகரை சேர்ந்தவர் ராஜ சுலோச்சனா (66) இவர் தனது வீட்டை கடந்த 2018 ஆம் ஆண்டு மார்கிரேட்மேரி என்பவருக்கு ஒத்திக்கு மூன்று வருடத்திற்கு அடமானம் வைத்ததாகவும்
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு தனது வீட்டை பணத்தை கொடுத்து மீட்க ராஜ சுலோக்சனா முயற்சி செய்ததாகவும் ஆனால் மார்கிரேட்மேரி ராஜ சுலோசனாவிடம் வீட்டை தர மறுத்ததோடு வீட்டிற்கு நான் வேலை செய்துள்ளேன் அதனால் ரூ 4 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால்தான் வீட்டை காலி செய்வேன் இல்லை என்றால் வீட்டை விட்டுப்போக முடியாது என மிரட்டுவதாகவும் இது சம்பந்தமாக ராஜசுலோக்சனா திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் கடந்த அக்டோபர் 2ம் தேதி புகார் செய்ததாகவும் ஆனால் திருவெறும்பூர் போலீசார் மார்கிரேட் மேரிக்கு ஆதரவாக பேசிவருவதோடு நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ராஜ சுலோக்சனா கடந்த 28ஆம் தேதி தனது வீட்டில் சென்று தங்கி உள்ளார் அப்பொழுது அவரை மார்கிரேட் மேரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜா சுலோக்சனா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் ராஜ சுலோக்சனா தனது வீட்டில் போய் அமர்ந்துள்ளார். இது சம்பந்தமாக மார்கிரேட் மேரி திருவெறும்பூர் போலீசருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திலிருந்து வந்த போலீசார் ராஜசுலோக்சனாவை வீட்டை விட்டு காலி செய்வதற்கு முயற்சி செய்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த ராஜ சுலோக்சனா எனது வீட்டை விட்டு நான் எங்கேயும் போக முடியாது எனக்கூறி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்நிலையில் திருவெறும்பூர் போலீசார் தொடர்ந்து மார்கிரேட் மேரிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாதர் சங்கத்தினர் திருவெறும்பூர் போலீசாரை கண்டித்து திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது