திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி பெரியவெள்ளபட்டியில் வசித்து வந்தவர் பழனியப்பன் மகன் வெங்கடாசலம் (65). இவர் அப்பகுதியில் கால்நடையை மேய்ச்சலில் விட்டுவிட்டு இருந்துள்ளார். கோடை வெப்பசலனம் காரணமாக மாலையில் இடி மின்னலுடன் மழை பெய்தது. மழைக்காக அருகிலிருந்த வேப்ப மரத்தடியில் ஒதுங்கியுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக மரத்தின் அருகில் விழுந்த இடி தாக்கியதில் வெங்கடாசலம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வருவாய்துறை மற்றும் போலீசார் வெங்கடாசலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
