திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பளூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தங்கச் செயினை வழிப்பறி செய்த மர்ம நபர்கள்.கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் கோத்தாரி தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி 59 வயதான புவனேஸ்வரி். இவர் பூவாளூரிலிருந்து தனியார் பேருந்தில் ஏறி நம்பர் 1 டோல்கேட்டில் இறங்கியுள்ளார். மேலும் இவர் கடந்த நான்கு வாரமாக நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று அம்மனை தரிசனம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் செல்வதற்காக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது பளூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்ற போது தனது கை பையை திறந்து பார்த்துள்ளார். அதில் இருந்த 6 பவுன் தங்கச் செயினை காணவில்லை. பையில் இருந்த தங்கச் செயினை மர்ம நபர்கள் வழிப்பறி செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கச் செயினை வழிப்பறி செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.