திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை அருகே கிளிக்கூடு கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் விற்பனை செய்யப்பட்ட பணத்தை நேற்று மாலை 7 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காரைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 29 வயதான மணிகண்டன் தனது மோட்டார் பைக்கில் எடுத்துக் கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது உத்தமர்சீலி மேலவெட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் மணிகண்டன் ஓட்டிச் சென்ற மோட்டார் பைக் மீது மோதுவதுபோல் சென்றுள்ளனர் பின்னர் பதிவெண் தெரியாத பல்சர் வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் பணம் எடுத்துச் சென்ற மணிகண்டன் மீது மிளகாய் பொடி தூவி அவரிடமிருந்த ரூ. 5 லட்சம் பணத்தை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
இது குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.