குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை தினமான நேற்று அனைத்து மது கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் மலைக்கோயில் அருகே அரசு மதுபாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் படி நடத்திய சோதனையில் அங்கு மது விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ரவி (56) யைப் பிடித்து விசாரித்ததில் மது விற்பதற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த தனது மனைவியின் தம்பி கிருஷ்ணன் 45 மற்றும் அவரது மனைவி விஜயசாந்தி 38 ஆகிய 2 பேரும் மதுபாட்டில்களை வீட்டின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு தப்பித்து ஓடிவிட்டதாக தகவல் அளித்தார். அவர் அளித்ததகவலின் பெயரில் வீட்டில் இருந்த 275 மது பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு ரவியை கைது செய்தனர். தப்பி ஓடிய கிருஷ்ணனையும் அவரது மனைவியும் போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி அருகே அரசு மது பாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை..ஒருவர் கைது..
- by Authour
