திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மேலவாளடியில் உள்ள மேம்பாலத்துக்கு கீழே அனுமதியின்றி சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
தமிழக அரசு சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில் விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி உத்தரவின் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல வாளாடி மேம்பாலத்துக்கு கீழ் சட்ட விரோதமாக அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து
சம்பவ இடத்திற்கு சென்ற தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் வினோத் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மேளவாளாடி அண்ணா நகரை சேர்ந்த 48 வயதான ராஜா என்கின்ற
மீசை ராஜா சட்ட விரோதமாக மது பாட்டிலை்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடம் இருந்த 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்து சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
இது குறித்து சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் ராஜா மீது வழக்கு பதிவு செய்து
கைது செய்தனர். பின்னர் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ல் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.