திருச்சி, திருவெறும்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை பள்ளி அருகே விற்றதாக மூன்று பேரை திருச்சி எஸ் பி தனிப்படை போலீசார் கைது செய்துஉள்ளதோடு அவர்களிடமிருந்து விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு கார் 12 கிலோ குட்கா பான் மசாலா உள்ளிட்டபொருட்களை கைப்பற்றி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தமிழக அரசு குட்கா பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை விற்பதற்கு தடை செய்துள்ளது. இதனை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே காட்டூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் அருகே கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுவதாக திருச்சி எஸ் பி தனிப்படை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எஸ்பி தனி படை போலீசார் அந்த கடையை சோதனை செய்த பொழுதுகடைக்குள் தடை செய்யப்பட்ட 12 கிலோ மதிப்பிலான குட்காப்பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்ததோடு அந்த கடையில் வேலைப்பார்த்த
பத்தாளப் பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்த பென்னி சேவியர் (39), கூத்தைப் பார் ரோடு சேர்ந்த முருகேசன் (54), காட்டூர் கமலா நேரு தெருவை சேர்ந்த ஜான் தனபால் (50 )ஆகிய மூன்று பேரையும் எஸ்பி தனிப்படை போலீசார் கைது செய்தனர் மேலும் அவர்களிடம் இருந்து 12கிலோ குட்கா ஒரு செல் போன் 7ஆயிரம், பணம் ஆகியவற்றை பறிமுதல்செய்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.