திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே எம். ஆர். பாளையத்தில் ஸ்ரீ விஸ்வரூப விஷ்ணு துர்க்கை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ சோலை வாழி மாரியம்மன், ஸ்ரீ சப்தர் மாதா, ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ கோமாதா மற்றும் துளசி மாடம் ஆகிய தெய்வங்களுக்கு நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர் அருகே சணமங்கலம் ஊராட்சியில் உள்ள எம். ஆர். பாளையத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ விஸ்வரூப துர்க்கை அம்மன் ஆலயம். இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா பணிகள் நடைபெற்று வந்தது. இவ்விழாவை முன்னிட்டு காலை 5:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நடைப்பெற்றது. பின்னர் சோழை வாழி மாரியம்மன், ஸ்ரீ சப்த மாதர், ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ கோமாதா மற்றும் துளசி மாடம் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு ஹோமம் பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 10 மணிக்கு மேல் ஸ்ரீ சப்த மாதர், ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ கோமாதா, மற்றும் துளசி மாடம் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து மகாதீபாதாரனை நடைபெற்றது. 10.30 மணிக்கு மேல் ஸ்ரீ சோழை வாழி மாரியம்மன் மற்றும் துர்க்கை அம்மன் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் கலசங்களுக்கு மகாதீபாதாரனை நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் சணமங்கலம், எம்.ஆர். பாளையம், திருப்பட்டூர், சிறுகனூர், பி. கே. அகரம், நெடுங்கூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து திரளாண பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.