திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் கிராமத்தில் இலாபகரமான கோழி வளர்ப்பு பற்றிய பண்ணை பள்ளி 15 ம் தேதி இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது.
பூனாம்பாளையம் கிராமத்தில்
வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் பயிற்சி நடத்தப்பட்டது. பண்ணை பள்ளியின் முதலாம் வகுப்பில் கால்நடை மருத்துவர் டாக்டர் .செந்தில்குமார் கோழி வளர்ப்பு முறைகள் பற்றி விளக்க உரையாற்றினார். மேலும் கொட்டகை அமைக்கும் முறைகளான கூண்டு முறை மற்றும் திறந்தவெளி முறை பற்றி எடுத்துரைத்தார். மேலும் கோழி குஞ்சுகளை தேர்ந்தெடுக்கும் முறை பற்றி எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் சின்ன பாண்டி தலைமை வகித்தார். வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் மாநில திட்டங்களை பற்றி எடுத்துரைத்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில்நுட்ப மேலாளர் கௌசிகா மற்றும் ஸ்வேதா மேற்கொண்டனர் . பெரம்பலூர் தந்தை ரோவர் கல்லூரி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனம் இறுதி ஆண்டு மாணவிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.