திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவை மண்ணச்சநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் அவர்களின் ஆலோசனைப்படி மண்ணச்சநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய
வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த சமுதாய வளைகாப்பு விழாவை ஒன்றிய பெருந்தலைவர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி சந்தனம்,குங்குமம் பூசி வளையல் அணிவித்து மாலையிட்டு மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான உணவுகள் வாழை இலையில் பரிமாறப்பட்டது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கக்கூடிய சீர் வரிசைகளையும் வழங்கினர்.
இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் மனோகரன், பேரூராட்சி தலைவர் சிவசண்முகக்குமார், மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள்,அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.