திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் தலைமலை அடிவாரப் பகுதியில் உள்ள ஒத்தரசு கிராமத்தை சேர்ந்த சிக்கன் மகன் புஷ்பராஜ் (43) லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக மது அருந்திவிட்டு தனது மகன் இல்லாத நேரத்தில் மனைவி மல்லிகா (44) என்பவரிடம் தகராறு செய்து வருவதாக கூறப்படுகிறது, இதே போல தனது மகன் தமிழ்ச்செல்வன் (20) என்பவர் வேலைக்கு சென்றதை அறிந்த புஷ்பராஜ் வீட்டில் தனியாக இருந்த தனது மனைவி மல்லிகாவிடம் வழக்கம்போல மதுபானம் அருந்திவிட்டு போதையில் தகராறு செய்துள்ளார், இதில் கோபமடைந்த மல்லிகா தனது கணவன் புஷ்பராஜை அறிவாளால் கழுத்தில் வெட்டியுள்ளார், இதில் பலத்த காயமடைந்த புஷ்பராஜ் சம்பவயிடத்திலேயே இறந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் சம்பவயிடத்திற்கு நேரில் சென்று இறந்து கிடந்த புஷ்பராஜ் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆகிற்காக அனுப்பி வைத்து புஷ்பராஜ் மகன் தமிழ்ச்செல்வன் தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீஸார் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள புஷ்பராஜ் மனைவி மல்லிகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
