திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி அருகே துவரங்குறிச்சி திடீர் நகர் குடியிருப்பு பகுதியில் வீட்டிற்குள் 10 அடி நீள சாரை பாம்பு ஒன்று சென்றுள்ளது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் துவரங்குறிச்சி
தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 10 அடி நீள பாம்பை லாபகரமாக பிடித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிடிப்பட்ட பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.