திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பத்தளபேட்டை பகுதியில் புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் திருமுருகன் மைன்ஸ் என்ற பெயரில் புலன் எண் 151ல் 2 மற்றும் 151ல் 3 ஆகிய இரண்டு சர்வே எண்களில் 86 எக்டேர் நிலப்பரப்பில் கிராவல் மண் எடுக்க கனிமவளத்துறை இடம் உரிமை பெற்றுள்ளார்.
ஆனால் அவர் தான் உரிமம் பெற்ற இடத்தை விட்டு புல எண் 176 இடத்தில் நீண்ட நாட்களாக சட்ட விரோதமாக ஹிட்டாச்சி இயந்திரத்தை கொண்டு டிப்பர் லாரிகளில் இராவல் மண் கடத்தப்படுவதாக திருவெறும்பூர் டிஎஸ்பி
அறிவழகனுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான சிறப்பு படை போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபொழுது சட்ட விரோதமாக கிராவல் மண் ஹிட்டாச்சி வாகனம் கொண்டு டிப்பர் லாரியில் ஏற்றி கொண்டிருந்த பொழுது கையும் களவுமாக பிடித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது சம்பந்தமாக பத்தாலப் பேட்டை கிராம நிர்வாக அலுவலர் ராதா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் புதுக்கோட்டை ராஜகோபாலத்தை சேர்ந்த சக்திவேல், கிழக்குறிச்சி முடுக்குப்பட்டி சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் தட்சிணாமூர்த்தி (50) தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ராம கன்னகள்ளி சேர்ந்த ஹிட்டாச்சி டிரைவர் ராகுல் (23) ஹிட்டாச்சி உரிமையாளர் தர்மபுரியை சேர்ந்த கருணாகரன் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர் என 5 பேர் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் தட்சிணாமூர்த்தி ராகுல் ஆகிய இருவரை கைது செய்ததோடு மற்ற மூன்று பேரை தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.