பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் துறையூர் பகுதியில் உள்ள பி.பி. என்ற கட்டுமான நிறுவனத்தில் ஐந்து வருடமாக கட்டிட மேற்பார்வையாராக வேலை செய்து வருகிறார் தற்போது சோபனபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக மூன்று வகுப்பு கட்டிடங்கள் கட்டுவதற்காக கட்டுமான பொருட்களை அந்த கட்டிடத்தில் அருகில் வைத்திருந்தார். நேற்று தடவாலப் பொருள்களை பார்த்த பொழுது அதில் இருந்த 8 MM கம்பி 20 NO 10 MM கம்பி 7NO காணவில்லை இதைத் தொடர்ந்து கட்டிட மேற்பார்வையாளர் சுரேந்தர் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் கட்டுமான பொருட்கள் திருடு போனது குறித்து புகார்
அளித்துள்ளார் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பிபி கட்டுமான நிறுவனத்தில் கொத்தனாராக வேலை செய்து வந்த கலிங்க முடையான்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்கத்தின் மகன் ராஜேந்திரன் என்பவர் திருடியதாக தெரிய வந்தது அவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்
