திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கீழ அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி 44 வயதான சித்ராதேவி. இவர்களுக்கு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைக்கு உள்ளனர். இந்நிலையில் கடந்த 16 ம் தேதி மதியம் குடும்ப பிரச்சனை காரணமாக மன்னனை எடுத்து தனக்குத்தானே உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.