திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெங்கடாசலபுரம் பகுதியில் வசிப்பவர் பெரியசாமி இவரது மனைவி ரஞ்சனி இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது பெரியசாமி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ரஞ்சனியின் வீடு தகரத்தால் ஆனது வீட்டில் தனியாக இருந்த ரஞ்சனி துணியை துவைத்து அங்குள்ள கம்பியில் துணியை காய வைத்துள்ளார். அப்போது தகரம் முழுவதும் பரவி இருந்த மின்சாரம் துணி காயவைத்த ரஞ்சனி மீது பாய்ந்துள்ளது இதனால் ரஞ்சனி தூக்கி வீசப்பட்டார் அக்கம் பக்கத்தினர் இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி சென்று ரஞ்சனியை உப்பிலியபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உப்பிலியபுரம் காவல் துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
