திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறு நாவலூர் ஊராட்சியில் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா நடைபெற்றது அதிகாலை 4 மணி முதல் பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் மீன்பிடிப்பதற்காக ஏரிக்கரையில் காத்திருந்தனர். காலை 7 மணி மணிக்கு ஊராட்சி நிர்வாகம் மீன்பிடிப்பதற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து வலை, தூண்டில், போன்ற மீன் பிடி ஆயுதங்களுடன் நீரில் இறங்கி பொதுமக்கள் மீன்களை பிடித்தனர். திருச்சி, தொட்டியம், முசிறி, நத்தம், விராலிமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருசக்கர வாகனங்களில் வந்து ஏரியில் மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர்.கெண்டை, பாறை, கெளுத்தி, இறால் போன்ற மீன்களை பிடித்து கூடையிலும் பைகளிலும் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.