திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மாந்துறையில் கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரியில் குடும்ப வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் கல்லூரி முதல்வர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. கல்லூரி பேராசிரியர்கள் ஆனந்தன், விக்னேஷ் முன்னிலை வகித்தனர்.
இதில் லால்குடி சிறை துறை கண்காணிப்பாளர் பழனிகுமார் மற்றும்ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் செல்வ குமார் ஆகியோர் கலந்து கொண்டு குடும்ப வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு
வழங்கினர். இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை லால்குடி வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் ஆல் தி சில்ரன் அறக்கட்டளை செய்திருந்தனர். கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்ட சட்டபணிக்கு தன்னார்வலர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.