திருச்சி நவல்பட்டு அருகே சின்ன சூரியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாந்தி இவரது மகள் சிவசக்தி வயது 22 இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சாந்தி தனது மகளான சிவ சக்தியை நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக நுழைவாயிலில் இறக்கி விட்டுள்ளார். பின்னர் சிவசக்தி வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் உறவினர்கள் வீடு நண்பர்கள் வீடு எங்கு தேடியும் கிடைக்காததால் சாந்தி நேற்று நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார். வழக்கு பதிந்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.