திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் மாரியம்மன் மேல்நிலைப்பள்ளியில்உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது.
திருச்சி மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகளை வேலைக்குஅனுப்புவதும் வேலைக்கு அமர்த்துவதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். பெண் குழந்தைகளை பாதுகாப்போம், படிக்க வைப்போம் தலைப்பில் பெண் குழந்தை கல்வியின் முக்கியத்துவம், பாலின சமத்துவம் குழந்தை திருமணம் தடுப்பு பாலியல் வன்முறையிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 10 9 8 குறித்து விழிப்புணர்வு வழங்கினார். சமயபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள்
ராம்குமார், பிரியா பாணு, காவலர் வானதி ஆகியோர் இணையவழி குற்றங்கள், போதைப் பொருள் தடுப்பு குறித்தும் ஐடிஎப்சி பஸ்ட் பாரத் நிறுவனத்தின் மேலாளர் சந்துரு குழந்தைகளின் கல்வி அவசியம், உயர்கல்வி படிப்பு குறித்து பேசினார்கள். குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதலுக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டு, குழந்தைகள் மீதான வன்முறை குறித்து போஸ்டர்கள் மாணவர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது. ஆசிரியர் முருகன் நன்றி கூறினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டார்கள்