திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள புலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அபினிமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் அசோக் குமார் இவர் மற்றும் இவரது தம்பி ஆனந்த்ராஜ் அவரது மனைவி முனிஸ்வரி உடன் அபனிமங்கலத்தில் ஊருக்கு சற்று தள்ளி வசித்து வருகின்றனர். விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறார்கள் இவர்கள் சம்பவத்தன்று சாத்தனூர் பகுதியை சேர்ந்த ஆதிக்க ஜாதியை சார்ந்த மோகன்ராஜ் மற்றும் பிரவீன் ஆகியோர் இரவு 8 மணி அளவில் இவர்களது வீட்டு முன்பு மது போதையில் நின்றதாக தெரிகிறது .மேலும் இவர்கள் வீட்டின் எதிரே மது அருந்த முயன்றதாக தெரிகிறது இதனால் அசோக் குமார் இங்கு மது அருந்த வேண்டாம் சற்று தூரம் தள்ளி சென்று அருந்துங்கள் என்று கூறியதற்கு நீ யாருடா என்று ஜாதியை பற்றி மோகன்ராஜ் கூறியதாக தெரிகிறது .
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது தொடர்ந்து மோகன்ராஜ் தகாத வார்த்தைகளில் திட்டி அசோக் குமார் மற்றும் அவரது தம்பி ஆனந்த் ராஜ் தம்பி மனைவி மற்றும் மாற்றுத்திறனாளியான அவரது தாய் ஆகியோரை கொலை வெறியுடன் தாக்கியதாக தெரிகிறது . இதனை அடுத்து மோகன்ராஜ் போன் செய்து தங்களுடைய உறவினர்களை சுமார் 40க்கும் மேற்பட்டோரை வரவழைத்து தனியாக வசித்து வரும் அசோக்குமார்
குடும்பத்தின் வீடு புகுந்து தாக்கியதாக தெரிகிறது. இதனால் படுகாயமடைந்த அசோக்குமர் அவரது தம்பி ஆனந்தராஜ் மற்றும் ஆனந்தராஜ் மனைவி முனீஸ்வரி மற்றும் மாற்றுத் திறனாளியான அவரது தாய் சுசிலா ஆகியவரை புலிவலம் காவல்துறை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர் இது குறித்து புலிவலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாங்குநேரி சம்பவம் தொடர்ந்து துறையூர் பகுதியில் ஜாதி ஆணவ வன்கொடுமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்..