திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தப்பாரைச் சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் பாலசுப்ரமணியன் வயது (21). பெல் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வெல்டர் பணியில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலசுப்பிரமணியன் வீட்டில் போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும், சிறிது நேரத்தில் தனது வீட்டின் அறைக்குச் சென்ற பாலசுப்ரமணியன் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை என்றும், பின்னர் சென்று பார்த்தபோதுவீட்டில் பாலசுப்ரமணியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்து அவரது பெற்றோர் பின்னர் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்க புகார் தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பால சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியன் இறப்பிற்கு என்ன காரணம் என்ன என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.