திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் வட்ட சட்ட பணிக்குழு மாணவர்களிடயே சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
இன்று கல்லூரி வளாகத்தில் முதல்வர் முனைவர் மாரியம்மாள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் லால்குடி வட்ட சட்ட பணிக்குழுத் தலைவர் சார்பு நீதிபதி திரு விஜயகுமார் மாணவர்களிடயே சட்ட விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்.
அப்போது மாணவர்களிடையே பேசிய நீதிபதி இந்திய அரசிலமைப்பு சட்டம், தண்டனை சட்டம், இன்றைய நிலையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுன.
மாணவர்களின் எதிகாலம் பற்றியும்,
நேர்மறை எண்ணங்கள்
இருக்கவேண்டும்,
ஆண், பெண் பாலினம் பாகுபாடு பார்க்கக்கூடாது,
ஒவ்வொருவரும் மற்றவர்கள் மீது அன்பு செலுத்தவேண்டும்,
அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும், தினமும் தியானம் செய்யவேண்டும்,
அரசு கல்லூரிதான் சிறந்தது, நானும்(நீதிபதி) அரசு கல்லூரியில் படித்துதான் இன்று நீதிபதி ஆகியுள்ளேன் என பேசினார்.
இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை NSS அலகு I அலுவலர் சக்திவேல் அலகு – II திருமதி சுகன்யா ஆகியோர் செய்திருந்தனர். முனைவர் சுலைமான் வரவேற்றார் இறுதியில் திருமதி. எழில்பாரதி நன்றி கூறினார்.