திருச்சி அரியமங்கலம் உய்யக்கொண்டான் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி முன்னிட்டு கோவில்களில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருச்சி அரியமங்கலம் உய்யக்கொண்டான் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் கோவிலில் மூலவரான ஆஞ்சநேயருக்கு பால், சந்தனம், மஞ்சள் தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், திரவிய பொடி, பழச்சாறு உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதனை தொடர்ந்து வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை சாற்றப்பட்டு மூலவருக்கு சிறப்பு மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபாடு செய்தனர்.
திருச்சி அருகே ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம்..
- by Authour
