திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகவதிபுரத்தை சேர்ந்தவர் அஜிஸ் வயது (52) இவர் துவாக்குடி வாழ வந்தான் கோட்டை பகுதியில் இரும்பு குடோன் வைத்து தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அந்த குடோனில் சத்தம் கேட்டுள்ளது அப்போது அங்கு வேலை பார்த்த காவலாளி குடோன் உள்ளே சென்று பார்த்துள்ளார் அப்போது அங்கு மூன்று சிறுவர்கள் உள்ளே நுழைந்து இரும்பை திருடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனைப் பார்த்த காவலாளி சத்தம் போட்டுள்ளார். உடனடியாக சிறுவர்கள் மூன்று பேரும் இரும்பை திருடி கொண்டு மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து காவலாளி குடோன் உரிமையாளர் அஜிசுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து அஜிஸ் துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து வாழவந்தான் கோட்டை அகதிகள் முகாமை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் வாழவந்தான் கோட்டை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய 2 சிறுவர்கள் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 4000 ரூபாய் மதிப்புள்ள 96 கிலோ இரும்புகளை பறிமுதல் செய்து அவர்களை திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.