திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மேல சீதேவிமங்கம் கிராமத்தில் 700 ஆண்டு பழமையான பெருமாள் கோயில் இடிந்த நிலையில் இருந்த்து. இதனை ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு பெருமாள் கோவில் கட்டுவதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வந்தனர். ஸ்ரீதேவி மங்கலத்தின் பூர்விகமாக வசித்து வந்த பஞ்சாபகேச ஐயர், வெங்கட்ராம ஐயர் மற்றும் அவர்களது உறவினர்களை தொடர்பு கொண்டு பெருமாள் கோவில் கட்டும் பணியை செய்து தருமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ஆகம விதி தலைமை ஆலோசகர் முரளி பட்டரை சந்தித்து பெருமாள் கோவில் கட்டுவதற்கு அறிவுரை கூறி வழி காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் இந்த திருக்கோவில் பாலாலயம் நடைப்பெற்று முதல் கட்ட பணியாக அன்றைய தினமே கோவிலின் கற்களை பிரித்து எடுக்கும் பணியை துவக்கியது. முன்னதாக கடந த மார்ச் மாதம் ஆகம விதிப்படி பூஜைகளை செய்து கோவிலில் அஸ்திவாரம் தோண்டப்பட்டு புதவடை பணியை துவங்கினர். தொடர்ந்து பல்வேறு திருக்கோவில் தளத்திலிருந்து எடுத்து வரப்பட்ட மண்ணை கருவறை பகுதியில் இட்டனர். மேல ஸ்ரீதேவி மங்கலத்தில் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேதவரதன் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் எழில் மிகு தோற்றத்துடன்புத்துயிர் பெற எளிய பூஜையுடன் பாலாலயம் நடைபெற்றது..
.
இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் முரளி பட்டர் வரதராஜ பெருமாள் கோவில் வழி காட்டுனர் வரதராஜ பெருமாள் கோவில் செயலாளர் உமேஷ் அனுஷா மற்றும் கோவில் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் என்கின்ற கிச்சா ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.