திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாசன் நகர் பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக மாவட்ட காவல் உதவி எண்ணுக்கு புகார் வந்தது.
அந்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில், ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் திருச்சி நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் அங்கு 2 பெண்களை வைத்து கடந்த சில தினங்களாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், வாடிக்கையாளர்களாக இருந்த 7 நபர்கள் இருந்தனர்.
இதை அடுத்து அவர்கள் 8 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து, ரூ.70,000/- பணம், 4 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 12 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் வினோத் என்பவர் தலைமறைவாகிவிட்டார்
விபச்சாரத்திற்கு, வீட்டை வாடகைக்கு அனுமதித்த வீட்டின் உரிமையாளர் ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் திருச்சி மாவட்ட அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.