Skip to content
Home » திருச்சி அருகே பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு… 5 பேர் கைது…

திருச்சி அருகே பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு… 5 பேர் கைது…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் யுவராஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் கடந்த 3 மாதத்திற்கு முன்பு செல்போன் நம்பர் கேட்டதாக கூறப்படுகிறது.
அடுத்த சில வாரங்களில் அந்த இளம் பெண் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், யுவராஜ் தன்னிடம் செல்போன் நம்பர் கேட்டது குறித்து கண்ணனி டம் அவரது மனைவி தெரிவித்துள்ளார். இதனால் கண்ணன், யுவராஜ் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழரசனின் சகோதரி மகனுக்கு திருப்பைஞ்சீலியில் திருமணம் நடைப்பெற்றது. அதேநாளில் திருப்பைஞ்சீலியில் கண்ணனின் நண்பர் வீட்டு கிரகப்பிரவேசம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி இரவு மது அருந்திக்கொண்டு கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் யுவராஜ் வீட்டின் முன்பு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள் இது குறித்து கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்ப்ட்டது. இதில் யுவராஜின் தாத்தா ராமச்சந்திரன் அத்தை விஜயா மற்றும் அதே

பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், நடராஜன் உள்ளிட்ட 6 பேரை அறிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் காயப்பட்ட அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அறிவாளால் வெட்டிய நபர்களை தேடி வந்த நிலையில்
திருப்பைஞ்சீலி தெற்கு தெருவைச் சேர்ந்த 25 வயதான கண்ணன், திருப்பைஞ்சீலி வடக்கு தெருவை சேர்ந்த 21 வயதான மதன்,மற்றும் 27 வயதான சந்தோஷ் சிறுகாம்பூர் மணத்தோப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயதான கிருஷ்ணகோபால், சித்தாம்பூர் குடித்தெருவை சேர்ந்த 20 வயதான அழகேசன், ஆகிய 5 பேரை நேற்றிரவு கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் போலீசார் அவர்களை கைது செய்து திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ல் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *