Skip to content
Home » திருச்சி அருகே கொடுத்த கடனை கேட்டவருக்கு கொலை மிரட்டல்…. 4 பேர் மீது வழக்கு…

திருச்சி அருகே கொடுத்த கடனை கேட்டவருக்கு கொலை மிரட்டல்…. 4 பேர் மீது வழக்கு…

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் உள்ள பாரதிதாசன் தெருவில் நண்பரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் குமரக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் 43 ஹரி பாஸ்கர். இவரும் மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த 54 வயதான தர்மலிங்கம் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் தர்மலிங்கம் அவரது மகள் திருமணத்திற்காக ஹரிபாஸ்கரிடம் கடந்த 2017 ஆம் ஆண்டு மூன்று லட்சம் கடன் வாங்கி உள்ளார். இந்நிலையில் ஹரி பாஸ்கர் கொடுத்த கடனை தர்மலிங்கத்திடம் கேட்டுள்ளார் ஆனால் அவர் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்மலிங்கம் வீட்டுக்குச் சென்ற ஹரி பாஸ்கர் கடனை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அப்போது ஹரிபாஸ்கருக்கும் தர்மலிங்கத்திற்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து தர்மலிங்கம் அவரது மனைவி ராஜகுமாரி மகன்கள் 24 ஆகாஷ் 22 வயதான விக்னேஸ்வரன் ஆகியோர் தகாத வார்த்தையால் திட்டியும் அறிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஹரி பாஸ்கர் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூன்றில் புகார் அளித்தார்.இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி மண்ணச்சநல்லூர் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *